இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான ஒப்பந்தங்களை விரைவுபடுத்த நடவடிக்கை!

#SriLanka #China
Mayoorikka
1 year ago
இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான ஒப்பந்தங்களை விரைவுபடுத்த நடவடிக்கை!

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 கடனை மறுசீரமைப்பதற்கும் பொருளாதார சவால்களை எதிர்கொள்வதற்கும் இலங்கையின் தற்போதைய முயற்சிகளுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்கப்படும் என சீனா மீண்டும் உறுதியளித்துள்ளது. இலங்கைக்கான சீன தூதுவர் சி சென்ஹொங் பிரதமர் தினேஷ் குணவர்தன இடையில் நேற்று முன்தினம் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. 

அலரி மாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. பிரதமரின் சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களை விரைவாக நடைமுறைப்படுத்துவது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்துவது இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பின் புதிய அத்தியாயத்தை ஆரம்பிக்கும் என பிரதமர் இதன்போது தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!