அநுர குமார திசாநாயக்கவை சந்தித்த நோர்வே தூதுவர்!

இலங்கைக்கான நோர்வே தூதுவருக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
நோர்வே தூதுவர் மே-எலின் ஸ்டெனர் மற்றும் அநுர குமார திசாநாயக்க ஆகியோருக்கிடையிலான சந்திப்பு மக்கள் விடுதலை முன்னணியின் காரியாலயத்தில் நேற்று பிற்பகல் இடம்பெற்றது.
சந்திப்பின் நோர்வே தூதரகத்தின் இரண்டாவது செயலாளரான ஜோன் பிஜேர்கெம், தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் ஆகியோர் கலந்து கொண்டனர். இன்றளவில் இலங்கை முகங்கொடுத்துள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் இன்றளவில் நாட்டில் நிலவுகின்ற அரசியல் நிலைமை இருதரப்பினரதும் நீண்ட உரையாடலுக்கு இலக்காகியது.
தேசிய சிக்கலின் நிகழ்கால வளர்ச்சிப்போக்குகள் பற்றியும் இவ்வருடத்தில் நடாத்தப்படவுள்ள தேர்தல்கள் பற்றியும் கவனஞ் செலுத்தப்பட்டது.
நோர்வே அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்படுகின்ற உதவிகள் பற்றியும் இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகளைப் பலப்படுத்த வேண்டியதன் அவசியம் பற்றியும் இத்தடவை இலங்கைக்கு வந்தபின்னர் மேற்கொள்ளப்படுகின்ற முதலாவது சந்திப்பு எனவும் நோர்வே தூதுவர் சுட்டிக்காட்டினார்.



