பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்காக நாளை திறக்கப்படும் ஆட்பதிவு திணைக்களம்
#SriLanka
#exam
Soruban
1 year ago
கல்விப் பொதுத்தராதர சாதாரணப் தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்காக நாளை (04) ஆட்பதிவு திணைக்களம் திறக்கப்படும் என அறிவிகப்பட்டுள்ளது.
இதுவரை தேசிய அடையாள அட்டை விண்ணப்பங்களை சமர்ப்பிக்காத விண்ணப்பதாரர்கள், முதன்மை அல்லது கிராம அலுவலரால் சான்றளிக்கப்பட்ட முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கொண்டு வர வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஆட்கள் பதிவுத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.drp.gov.lk இலிருந்து உரிய தகவல் உறுதிப்படுத்தல் கடிதத்தை பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.