அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று முதல் விடுமுறை!
#SriLanka
#School
#exam
Soruban
1 year ago
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் பாடசாலைகளில் 2024 ஆம் ஆண்டுக்கான முதலாம் பாடசாலை தவணையின் இரண்டாம் கட்டம் இன்றுடன் நிறைவடையவுள்ளதாகவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
பாடசாலைகளின் முதலாம் தவணையின் மூன்றாம் கட்டம் எதிர்வரும் 20ஆம் திகதி ஆரம்பமாகும்.சிங்களம் மற்றும் தமிழ் பாடசாலைகளின் மூன்றாம் கட்டம் மே மாதம் 31ஆம் திகதி முடிவடைகிறது.
இதேவேளை, 2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணத் தரப் பரீட்சை எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ளதால் அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் பாடசாலைகளில் இன்று முதல் விடுமுறை வழங்கப்படவுள்ளது.