இன்று நள்ளிரவு முதல் லிட்ரோ எரிவாயு விலையை குறைக்க நடவடிக்கை!
#SriLanka
#Litro Gas
Mayoorikka
1 year ago
இன்று (03) நள்ளிரவு முதல் எரிவாயு விலையை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் இதனை இன்று (03) அறிவித்தார்.
இதன்படி, தற்போது 4,115 ரூபாயாக விற்பனை செய்யப்படும் 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 3,940 ரூபாயாகும். அத்துடன், 5 கிலோகிராம் எடை கொண்ட சிலிண்டரின் விலை ரூ.70 குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை ரூ.1,582 ஆகும்.
மேலும், 2.3 கிலோகிராம் எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் விலை 32 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 740 ரூபாயாகும்.