தமிழர்களின் அபிலாசைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும்: எரிக் சொல்ஹெய்ம்
#SriLanka
#Erick Solheim
Mayoorikka
1 year ago
தமிழர் உரிமைகளுக்கான போராட்டம் தொடரும். ஆனால், வன்முறையற்ற வழிகளில் என ஜனாதிபதியின் சர்வதேச காலநிலை ஆலோசகர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தளத்தில் இட்டுள்ள பதிவிலேயே இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை அரசு அதிகாரங்களைப் பகிரவேண்டும். பாதுகாப்பு சிறந்த நிலையில் உள்ளது. யுத்தம் நடந்த காலத்துக்குத் திரும்பிச் செல்வதை எவரும் விரும்பவில்லை.
இருப்பினும், தமிழர்களின் பல அபிலாசைகள் இன்னமும் பூர்த்திசெய்யப்பட வேண்டிய நிலையிலேயே உள்ளன.
யுத்தத்தின்போது காணாமல் ஆக்கப்பட்டவர்கள், கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகள், மத வழிபாட்டுத்தலங்கள் தொடர்பான குழப்பங்கள் தீர்க்கப்பட வேண்டும்
வடக்கு இலங்கையில் வேலைவாய்ப்புக்கள் மற்றும் சுபீட்சம் என்பன உறுதிப்படுத்தப்பட வேண்டும் என எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.