வவுனியாவில் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான போதைப் பொருளுடன் ஒருவர் கைது!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
வவுனியாவில் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான போதைப் பொருளுடன் ஒருவர் கைது!

வவுனியா உக்குளாங்குளம் பகுதியில் பல லட்சம் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

போதைப்பொருள் விற்பனை இடம்பெறுவதாக வவுனியா விசேட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு பொலிஸ் பரிசோதகர் ரிஸ்வி தலமையிலான பொலிஸ் பிரிவினர் திடீர் சோதனை நடவடிக்கையினை உக்குளாங்குளம் பகுதியில் முன்னெடுத்திருந்தனர்.

இதன் போது 50கிராம் ஐஸ் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் செட்டிக்குளம் பகுதியினை சேர்ந்த 36வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கைப்பற்ற போதைப்பொருளின் பெறுமதி கிட்டத்தட்ட 15 லட்சம் ரூபா எனவும் கைது செய்யப்பட்ட நபரிடம் முன்னெடுக்கப்படும் மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கையினை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!