பெண் தலைமை தாங்கும் குடும்பத்திற்கு வீடொன்றை நிர்மாணித்து கொடுக்க முன்வந்த இராணுவத்தினர்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
பெண் தலைமை தாங்கும் குடும்பத்திற்கு வீடொன்றை நிர்மாணித்து கொடுக்க முன்வந்த இராணுவத்தினர்!

பெண் தலைமை தாங்கும் குடும்பம் ஒன்றிற்கு கல்முனை 18 ஆவது விஜயபாகு காலாட் படைப்பிரிவு முகாம் இராணுவத்தினரால் வீடொன்று நிர்மாணித்து கொடுப்பதற்கான அடிக்கல் இன்று (02.05) நாட்டப்பட்டுள்ளது. 

அம்பாறை மாவட்டம் இலங்கை இராணுவத்தின் 24 வது காலாட்படை பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் அனில் பெரேராவின் ஆலோசனைக்கமைய 241 இராணுவ பிரிவின் கட்டளை அதிகாரி கேணல் தனிக பதிரட்ன வழிகாட்டலில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. 

images/content-image/1714657474.jpg

இந்நிகழ்வில் அம்பாரை கல்முனை 18 ஆவது விஜயபாகு காலாட் படைப்பிரிவின் கட்டளை அதிகாரி மேஜர் களுஆராச்சி உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து சிறப்பித்திருந்தனர்.  

இது தவிர கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.ரம்சீன் பக்கீர் மற்றும் நிர்வாக கிராம உத்தியோகத்தர் அமலதாசன் இகிராம உத்தியோகத்தர் சுந்தரராஜன் மற்றும் கல்முனை வடக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!