பொது சுகாதார பரிசோதகர்கள் எனக் கூறி பணமோசடி : மக்களே உஷார்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
பொது சுகாதார பரிசோதகர்கள் எனக் கூறி பணமோசடி : மக்களே உஷார்!

பொதுச் சுகாதார பரிசோதகர்கள் எனக் கூறி வர்த்தகர்களுக்கு தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு பணம் பெறும் மோசடி ஒன்று இடம்பெற்று வருவதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

கடந்த சில நாட்களாக இது தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அதன் தலைவர்  உபுல் ரோஹன குறிப்பிட்டுள்ளார். 

பொதுச் சுகாதார பரிசோதகர்கள் என கூறிக்கொண்டு தொலைபேசி அழைப்புக்களை மேற்கொள்ளும் நபர்களுக்கு பணம் வழங்குவதை தவிர்க்குமாறு வர்த்தகர்களிடம்  உபுல் ரோஹன கோரிக்கை விடுத்துள்ளார்.  

"ஸ்டார் கிளாஸ் ஹோட்டல்களுக்குக் கூட தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு பொது ஆய்வாளர்கள் போல் நடித்து பணம் கேட்கின்றனர்.

 சில தொழிலதிபர்களை ஏமாற்றி பணம் பறித்த வழக்குகள் ஏராளம். சமீபகாலமாக காவல் நிலையங்களில் ஏராளமான புகார்கள் வந்துள்ளன” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!