வவுனியாவில் முன்னெடுக்கப்பட்ட மேதின ஊர்வலம்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
தமிழ்தேசிய மக்கள் முண்ணனியின் பிரதான மேதின ஊர்வலமும் பொதுக்கூட்டமும் வவுனியாவில் இன்று (01.05) எழுச்சியுடன் இடம்பெற்றது.
முன்னதாக வவுனியா பண்டாரவன்னியன் சிலை முன்பாக ஆரம்பமான மேதின ஊர்வலம் அங்கிருந்து குருமன்காடு கலைமகள் விளையாட்டு மைதானம்வரை சென்றது. அங்கு மேதின கூட்டம் இடம்பெற்றது.

முண்னணியின் வவுனியா மாவட்ட முக்கியஸ்தர் தவபாலன் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கயேந்திரன், முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ், சட்டத்தரணி க.சுகாஸ்,மற்றும் தொண்டர்கள்,ஆதரவாளர்கள் பெருமளவான பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
பேரணியில் கலந்துகொண்டவர்கள் எங்கள் நிலம் எமக்கு வேண்டும், இனப்படுகொலைக்கு சர்வதேச நீதிவேண்டும்,வெடுக்குநாறி எங்கள் சொத்து போன்ற கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.