எரிக் சொல்ஹெய்ம் வடக்கு மாகாண ஆளுநருடன் சந்திப்பு
#SriLanka
#NorthernProvince
#Governor
Mayoorikka
1 year ago
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சர்வதேச காலநிலை ஆலோசகரும், முன்னாள் நோர்வே வெளிவிவகார அமைச்சருமான எரிக் சொல்ஹெய்ம் (Mr. Erik Solheim) வடக்கு மாகாண ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸ் செவ்வாய்க்கிழமை சந்தித்து கலந்துரையாடினார்.

வடக்கு மாகாண ஆளுநரின் யாழ்ப்பாணத்திலுள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
வடக்கு மாகாணத்தின் தற்போதைய நிலை, மீள்குடியேற்ற நடவடிக்கையின் முன்னேற்றம், எதிர்கால அபிவிருத்தி செயற்பாடுகள், சுற்றாடல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நடவடிக்கைகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.