ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர்: வெளியானது அறிவிப்பு

#SriLanka #Election
Mayoorikka
1 year ago
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர்: வெளியானது அறிவிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக விஜயதாச ராஜபக்ச போட்டியிடுவார் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

 தொழிற்சங்க தலைவர் டி.பி. இளங்கரத்னவின் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு தெரிவித்தார்.

 அங்கு மேலும் உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, "விஜயதாச ராஜபக்ஷவுக்கு கட்சியின் பெரும்பான்மையானவர்களின் ஆதரவு உள்ளது.

 நான் இம்முறை சத்தியப்பிரமாணம் செய்யும் போது மீண்டும் போட்டியிட மாட்டேன் என்று சொன்னேன். விஜயதாச ராஜபக்ஷ தான் இம்முறை கேட்பார். நாங்கள் அவருக்கு முழு ஆதரவையும் அளிப்போம். அவர் இப்போது எம்மவர். இப்போது அவருக்கு அமைச்சராக இருப்பதில் விருப்பம் இல்லை''.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!