அனைத்து விதமான எரிபொருட்களுக்கான விலை குறைப்பு!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
#petrol
Thamilini
1 year ago
அனைத்துவிதமான எரிபொருட்களும் நேற்று (30.04) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைவடைந்துள்ளது.
இதன்படி, ஒக்டேன் 92 பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 03 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 368 ரூபாவாகும்.
ஒக்டேன் 95 லீற்றர் பெற்றோல் ஒன்றின் விலை 20 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 420 ரூபாவாகும்.
ஒரு லீற்றர் வெள்ளை டீசலின் விலை 30 ரூபாவினால் குறைந்துள்ளதுடன் அதன் புதிய விலை 333 ரூபாவாகும்.
அத்துடன் லங்கா சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 09 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 377 ரூபாயாக பதிவாகியுள்ளது.
மண்ணெண்ணெய் விலை 30 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 215 ரூபாவாகும்.