வவுனியாவில் உழைப்பாளர் தினத்தன்று விடுமுறை வழங்குமாறு கோரிக்கை!

#SriLanka #Vavuniya #sri lanka tamil news
Thamilini
1 year ago
வவுனியாவில் உழைப்பாளர் தினத்தன்று விடுமுறை வழங்குமாறு கோரிக்கை!

தொழிலாளர் தினம் அல்லது உழைப்பாளர் தினம் என்பது உலகம் முழுவதும் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் விடுமுறை நாளாகும். 

அது தொழிலாளர் ஒன்றிய இயக்கத்திலிருந்து தொழிலாளர்களின் பொருளாதார மற்றும் சமூக சாதனைகளைக் கொண்டாடுவதை குறிக்கின்றது அதிகபட்சமான நாடுகள் தொழிலாளர் தினத்தை மே 1 அன்று கொண்டாடுகின்றன. 

இந்நாள் பிரபலமாக மே தினம் அல்லது சர்வதேச தொழிலாளர்தினம் என்று அறியப்படுகின்றது.

இந்த தினத்தில் வவுனியா மாவட்டத்திலிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் ஏனைய சேவைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மே 1ம் திகதி விடுமுறை வழங்குமாறு வவுனியா வர்த்தக சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்

வவுனியாவில் கடந்த காலங்களில் வர்த்தக நிலைய உரிமையாளர்கள் வழங்கிய ஒத்துழைப்புக்களை இவ்வருடமும் உலக தொழிலாளர்கள் தினத்தில் உழைப்பால் இந்த உலகத்தினை உருவாக்கிய உழைப்பாளர்களுக்கு வர்த்தக நிலைய உரிமையாளர்கள் விடுமுறை வழங்கி அவர்களை கௌரவிக்குமாறு வவுனியா வர்த்தகர் சங்கத்தினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!