கணவனை மீட்க பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுத்த பெண் கைது!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
கணவனை மீட்க பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுத்த பெண் கைது!

ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட தனது கணவரை விடுவிக்க களுத்துறை தெற்கு ஊழல் தடுப்பு பிரிவு நிலைய கட்டளைத் தளபதிக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  

சந்தேக நபர் 03 இலட்சம் ரூபாவை இலஞ்சமாக வழங்க முற்பட்டுள்ளதாக களுத்துறை தெற்கு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.  

களுத்துறை வடக்கு பிரதேசத்தை சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 

களுத்துறை தெற்கு லஞ்ச ஒழிப்புப் பிரிவு நிலையத்தின் கட்டளைத் தளபதி உப பொலிஸ் பரிசோதகர் டி.ஸ்ரீ ரங்கா ஹெரோயின் போதைப்பொருளுடன் கணவனை கைது செய்து களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளார். 

சந்தேக நபர் சட்டையை  எடுத்து வருமாறு மனைவிக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்ததாகவும், சுமார் 20 நிமிடங்களின் பின்னர் மனைவி பொலிஸ் நிலையம் வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

இதன்போதே குறித்த பெண் பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முற்பட்டுள்ளார். இதனையடுத்து அவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!