சர்வதேசத்திடம் நீதி கேட்டு தாய்மார்கள் போராட்டம்!

#SriLanka #Protest
Mayoorikka
1 year ago
சர்வதேசத்திடம்  நீதி கேட்டு தாய்மார்கள்  போராட்டம்!

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.

 குறித்த போராட்டம் காலை 10.30 மணியளவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்திற்கு முன்பாக இடம்பெற்றது. காணாமல் போன தமது பிள்ளைகளின் படங்களையும் பதாகைகளையும் ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

images/content-image/2024/04/1714461276.jpg

 குறித்த போராட்டத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது தமது உறவுகள் தங்களுடன் கொஞ்ச காலம் என்றாலும் வாழ வேண்டும் என்று தொடர்ச்சியாக தாம் போராடி வருவதாகவும் தமது போராட்டத்தை இதுவரையில் அரசாங்கம் கவனத்தில் கொள்ளாத நிலையில் சர்வதேசத்திடம் நீதி கேட்டு நிற்பதாகவும் கவலை தெரிவித்திருந்தனர்.

images/content-image/2024/04/1714461289.jpg

 குறித்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட போது ஆயிரக்கணக்கான பேருடன் ஆரம்பித்து தற்பொழுது நலிவடைந்து போய் இதுவரையில் பல அம்மாக்கள் உயிரிழந்தும் போயுள்ளனர் எனவும் தெரிவித்திருந்தனர்

images/content-image/2024/04/1714461304.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!