இரத்தோட்டை பகுதியில் மின்னல் தாக்கியதில் வீட்டிற்குள் இருந்த இருவர் உயிரிழப்பு!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
இரத்தோட்டை, வெல்கலய பிரதேசத்தில் வீடொன்றில் இருந்த சகோதரனும் சகோதரியும் மின்னல் தாக்கி நேற்று (29.04) உயிரிழந்துள்ளனர்.
வெல்கலய, ரத்தோட்ட பிரதேசத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமியும் 23 வயதுடைய இளைஞனுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இருவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் என போலீஸார் தெரிவித்தனர்.
சடலங்கள் ரத்தோட்டை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இரத்தோட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.