மே தினக் கூட்டத்தில் ட்ரோன்களை பறக்கவிட தடை!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

மே தினக் கூட்டங்களில் ஆளில்லா விமானங்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு ஆளில்லா விமானங்களை பயன்படுத்துவதற்கு அவசியமானால் அதற்கு முன் அனுமதி பெற வேண்டும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.
இந்த சட்டம் நாடளாவிய ரீதியில் நடைபெறும் அனைத்து மே தின பேரணிகளுக்கும் பொருந்தும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



