நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ நியமிக்கப்பட்டமை முற்றிலும் விரோதமானது!

#SriLanka
Mayoorikka
2 weeks ago
நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ நியமிக்கப்பட்டமை முற்றிலும் விரோதமானது!

சுதந்திர கட்சியின் பதில் தவிசாளராக நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ நியமிக்கப்பட்டமை கட்சியின் யாப்புக்கு முற்றிலும் விரோதமானது.

 மைத்திரிபாலவுடன் ஒன்றிணைந்து தனது நற்பெயரை விஜயதாஸ இல்லாதொழித்துக் கொள்ள கூடாது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.

 கொழும்பில் உள்ள இலங்கை மன்றக் கல்லூரியில் திங்கட்கிழமை (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 அவர் மேலும் கூறியதாவது, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பிரச்சினைகள் தீவிரமடைந்துள்ள நிலையில் கட்சியின் பதில் தவிசாளராக நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளமை சுதந்திர கட்சியின் யாப்புக்கு முற்றிலும் விரோதமானது. பல அரசியல் கட்சிகளில் உறுப்பினராக பதவி வகித்த விஜயதாஸ ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் நோக்கத்தில் சுதந்திர கட்சிக்கு வருகை தந்துள்ளார்.

 மைத்திரிபால சிறிசேன வீதியில் செல்பவர்களை அழைத்து வந்து அவர்களை நிறைவேற்று சபையில் அமர செய்து தவறான தீர்மானங்களை எடுத்துள்ளார்.நாட்டின் நீதியமைச்சரான விஜயதாஸ ராஜபக்ஷவுக்கு அரசியல் கட்சிகளின் யாப்பு மற்றும் பொது சட்டம் பற்றி கூற வேண்டிய தேவை இல்லை.

 சுதந்திர கட்சியை சீரழித்த மைத்திரிபால சிறிசேனவுடன் ஒன்றிணைந்துள்ள நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தனது நற்பெயரை இல்லாதொழித்துக் கொள்ள கூடாது என்பதை மாத்திரம் குறிப்பிட்டு;க் கொள்ள விரும்புகிறேன் என்றார்.