நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள சில அரச ஊழியர்கள்!
#SriLanka
#strike
Mayoorikka
1 year ago

நாடளாவிய ரீதியில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இன்று சுகவீன விடுமுறையை அறிவித்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர்.
அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சேவைச் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமக்கு போக்குவரத்து மற்றும் காகிதாதிகள் உள்ளிட்டவற்றை வழங்காமைக்கான உரிய தீர்வை பெற்றுத்தருமாறு கோரி அவர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர் என அதன் தலைவர் அனுராத செனவிரத்ன தெரிவித்துள்ளார்.



