வவுனியாவில் இளங்கோ அடிகளின் நினைவு தினம் அனுஷ்டிப்பு!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

தமிழ் மொழியில் தோன்றிய முதற் காப்பியமான சிலப்பதிகாரத்தினை இயற்றிய இளங்கோ அடிகளின் நினைவுநாள் வவுனியாவில் இன்று (23.04) அனுஷ்டிக்கப்பட்டது.
வவுனியா சின்னப்புதுக்குளம் சிவன் கோவிலுக்குகருகில் அமைந்துள்ள அடிகளாரின் திருவுருவச்சிலைக்கருகில் குறித்த நிகழ்வானது இடம்பெற்றிருந்தது.
இதன் போது இளங்கோவாடிகளாரின் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மலரஞ்சலியும் செலுத்தப்பட்டதுடன் சிறப்புரைகளும் இடம் பெற்றிருந்தது.
வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன், நகரசபை செயலாளர் பாலகிருபன், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் கண்ணன், முன்னாள் நகரசபை உறுப்பினர்கள், அகிலாண்டேஸ்வரி சிறுவர் இல்ல மாணவர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.



