ஆன்டிபாடி ஊசி வழக்கு : கெஹலியவின் விளக்கமறியல் நீட்டிப்பு!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
ஆன்டிபாடி ஊசி போட்ட வழக்கில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 9 சந்தேகநபர்களும் எதிர்வரும் மே மாதம் ஆறாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான வழக்கு இன்று மீண்டும் அழைக்கப்பட்ட போதே மாளிகாகந்த நீதவான் லோசினி அபேவிக்ரம இந்த உத்தரவை பிறப்பித்தார்.
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சார்பில் ஆஜரான ஜனாதிபதியின் சட்டத்தரணி முன்வைத்த பிணை கோரிக்கை அங்கு நிராகரிக்கப்பட்டது.