யாழில் தொற்றா நோய் விழிப்புணர்விற்காக முன்னெடுக்கப்பட்ட துவிச்சக்கர வண்டி பவனி!

#SriLanka #Jaffna #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
யாழில் தொற்றா நோய் விழிப்புணர்விற்காக முன்னெடுக்கப்பட்ட துவிச்சக்கர வண்டி பவனி!

யாழ்ப்பாணம் வடமராட்சு பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையினரால் AIA காப்புறுதி நிறுவன அனுசரணையுடன் அதன் ஊழியர்கள், உத்தியோகத்தர்கள் இணைந்து தொற்றா நோய் விழிப்புணர்விற்கான நிகழ்வாக துவிச்சக்கர வண்டி பவனியை இன்று (21.04)  காலை 6:00 மணியளவில் ஆரம்பித்துவைத்தனர்.  

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் என்.தயாளினி தலைமையில் ஆரம்பமான குறித்த தொற்றா நோய் விழிப்புணர்வு பவனியை மருத்துவர்கள், ஊழியர்கள் மேற்கொண்டனர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஆரம்பமான குறித்த துவிச்சக்கர வண்டி பவனி நெல்லியடி நகரிற்க்கு சென்று அங்கிருந்து வதிரிச் சந்தி ஊடாக மாலைசந்தி ஊடாக மீண்டும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையை சென்று அங்கு நிறைவடைந்தது.  

இதனை வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர்  தயாளினி, மகப்பேற்று நிபுணர்,ஜெசிதரா AIA நெல்லியடி கிளை முகாமையாளர் ரகுபரன், நெல்லியடி போலீஸ் நிலைய போக்குவரத்து போலீஸ் அதிகாரி ஆகியோர் இதனை ஆரம்பித்து வைப்பதனர்.

இதில் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலை மருத்துவர்கள், உத்தியோகத்தர்கள், நலன்விரும்பிகள், ஏஐஏ காப்புறுதி நிறுவன ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!