ரம்பே பகுதியில் மோட்டார் சைக்கள் விபத்து : ஒருவர் பலி!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

ரம்பே - மல்சிறிபுர வீதியில் பன்சியகம பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மூவர் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மின்கம்பத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்து நேற்று (19.04) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் சாரதியும் பின்னால் பயணித்தவரும் படுகாயமடைந்துள்ளதுடன், பொல்பித்திகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளையில் சாரதி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் கலதன்வெவ பிரதேசத்தில் வசிக்கும் 16 வயதுடைய மாணவராவார். காயமடைந்த மற்ற நபர்மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.



