கடமைக்கு திரும்பாத இராணுவ வீரர்களுக்கு பொதுமன்னிப்பு!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
நீண்ட நாட்களாக விடுமுறையின்றி கடமைக்கு சமூகமளிக்காத இலங்கை இராணுவத்தின் இராணுவ வீரர்களுக்கு இன்று (20.04) முதல் பொது மன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பொது மன்னிப்பு காலம் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என இராணுவம் தெரிவித்துள்ளது.
இதன்படி, இந்தக் காலப்பகுதியில் தாங்கள் சேர்ந்த படைப்பிரிவு மையத்தை தொடர்பு கொண்டு சட்டப்பூர்வமாக சேவையை விட்டு வெளியேறுவதற்கான வாய்ப்பு அவர்களுக்கு உள்ளது.
இராணுவ அடையாள அட்டையின் நகல், தேசிய அடையாள அட்டை அல்லது ஓட்டுநர் உரிமம், சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் வரவு வைக்கப்பட்டுள்ள வங்கி புத்தகத்தின் புகைப்பட நகல் இங்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும் என இராணுவம் அறிவித்துள்ளது.