பாடசாலை மாணவர்களுக்கான உணவுப் பொருட்கள் வழங்கும் திட்டம் ஆரம்பம்!

#SriLanka #School #School Student #Tamil Food
Mayoorikka
1 year ago
பாடசாலை மாணவர்களுக்கான உணவுப் பொருட்கள்  வழங்கும் திட்டம் ஆரம்பம்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கமைய பாடசாலை மாணவர்களுக்கு போசாக்குள்ள உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்காக உலக உணவுத் திட்டத்தின் மூலம் பாடசாலைகளுக்கு வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகம் நேற்று வெயங்கொட உணவு களஞ்சிய வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

 பாடசாலை மாணவர்களிடையே இரும்புச் சத்து குறைபாட்டைக் குறைக்கும் நோக்கில், பாடசாலை உணவுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படுவதுடன், ஜனாதிபதி செயலகத்தின் கீழுள்ள உலக உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.எச்.ஏ.எம்.ரிப்லானின் மேற்பார்வையில் இந்த விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

 இதன்படி, முதற்கட்டமாக மாகாண மட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு 735 மெற்றிக் தொன் அரிசி வழங்கும் நடவடிக்கை நேற்று ஆரம்பமானதுடன் இன்றும் இந்தப் பணிகள் தொடரும். சம்பந்தப்பட்ட மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களின் கண்காணிப்பின் கீழ் பாடசாலைகளுக்கு அரிசி விநியோகிக்கப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!