இலங்கையில் குழந்தைகள் நல நிபுணர்கள் மயக்க மருந்து நிபுணர்களுக்கு பற்றாக்குறை
#SriLanka
#doctor
Mayoorikka
1 year ago
இலங்கையில் மயக்க மருந்து நிபுணர்கள் மற்றும் குழந்தை மருத்துவர்களின் பற்றாக்குறை இன்னும் இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
பலர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக சுகாதார செயலாளர் நிபுணர் வைத்தியர் பாலித மஹிபால குறிப்பிட்டுள்ளார். மற்றுமொரு குழு வெளிநாட்டு பயிற்சிக்காக சென்றுள்ளதாக சுகாதார செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாட்டு உதவிக்கு சென்ற சில வைத்தியர்கள் தற்போது வரவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதனால் ஹம்பாந்தோட்டை மற்றும் எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலைகளில் அண்மைக்காலமாக விசேட வைத்தியர்கள் இன்மையால் நோயாளர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.