இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவின் கார் தீப்பிடித்துள்ளது!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவின் கார் தீப்பிடித்துள்ளது!

இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவின் கார் திடீரென தீப்பிடித்துள்ளது. 

இராஜாங்க அமைச்சர் பயணித்த கார் பண்டாரவளை ஹல்பே பகுதியில் திடீரென தீப்பிடித்துள்ளது. 

இந்த சம்பவம் இன்று அதிகாலை 12.45 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இராஜாங்க அமைச்சர் மஹியங்கனையிலிருந்து எல்ல பிரதேசத்திற்கு வந்து கொண்டிருந்த போதே தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

எனினும், இந்த தீ விபத்தில் மாநில அமைச்சருக்கோ, ஓட்டுனருக்கோ காயம் ஏற்படவில்லை. பண்டாரவளை மாநகரசபையின் தீயணைப்பு பிரிவினர், எல்ல பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!