இலங்கையில் ஒவ்வொரு மாதமும் 25-30 சைபர் தாக்குதல்கள்
#SriLanka
#Crime
Mayoorikka
1 year ago

இலங்கையில் ஒவ்வொரு மாதமும் 25 முதல் 30 இணையத்தளங்கள் சைபர் தாக்குதலுக்கு இலக்காவதாக இலங்கை கணினி அவசர பதிலளிப்பு மன்ற பிரதம தகவல் பாதுகாப்பு அதிகாரி நிரோஷ் ஆனந்த தெரிவித்துள்ளார்.
அண்மையில் சைபர் தாக்குதல் காரணமாக செயலிழந்த கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மீளமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



