சஜித்திற்கு திஸ்ஸ அத்தநாயக்க அறிவுரை!

#SriLanka #Sajith Premadasa
Mayoorikka
1 year ago
சஜித்திற்கு திஸ்ஸ அத்தநாயக்க அறிவுரை!

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித்பிரேமதாச தான் யாருடன் இணைந்துசெயற்படுகின்றார் என்பது குறித்து எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க எச்சரித்துள்ளார்.

 அடிக்கடி கட்சி மாறுபவர்களுடன் ஊழலில் ஈடுபடுபவர்களுடன் சஜித் இணைந்து செயற்படக்கூடாது என தெரிவித்துள்ள திஸ்ஸ அத்தநாயக்க ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு யாருடன் இணைந்து செயற்படலாம் என்ற முடிவை எடுக்கும் அதிகாரத்தை கட்சியின் தலைவருக்கு வழங்கியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

 ஐக்கிய மக்கள் சக்தி என்ஜேபியுடன் இணைந்;து செயற்படுவதை எதிர்க்கவில்லை எனினும் தவறான நபர்களுடன் கூட்டணி வைத்துக்கொண்டால் மக்கள் அதனை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 என்ஜேபி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் அவசரஅவசரமாக உடன்படிக்கையில் கைச்சாதிட்டுள்ளோம் இது கட்சியின் பல உறுப்பினர்களிற்கு தெரியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!