முழங்காவில் மாவீரர் துயிலுமில்லம் தொடர்பில் நீதிமன்றத்தை நாடிய பொலிஸார்!

#SriLanka #Police #Kilinochchi #Court
Mayoorikka
1 year ago
முழங்காவில் மாவீரர் துயிலுமில்லம் தொடர்பில் நீதிமன்றத்தை நாடிய பொலிஸார்!

கிளிநொச்சி – முழங்காவில் மாவீரர் துயிலுமில்ல நுழைவாயிலில் உள்ள வளைவை அகற்றுவதற்கு பொலிஸார் நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.

 குறித்த வளைவை அகற்ற பூநகரி பிரதேச சபை செயலாளருக்கு பணிப்பு விடுக்குமாறு கோரி முழங்காவில் காவல்நிலைய பொறுப்பதிகாரி நீதிமன்றை நாடியுள்ளார்.

 இதனையடுத்து இன்று வியாழக்கிழமை நீதிமன்றில் ஆஜராக பூநகரி பிரதேசசபை செயலாளருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பூநகரி பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதியில் தற்போது முழங்காவில் துயிலுமில்லம் தாவரவியல் பூங்காவாக பேணப்பட்டுவருகின்றது. இந்நிலையில் கடந்த ஆண்டு மாவீரர் தினத்தை முன்னிட்டு தற்காலிக வளைவு ஒன்று துயிலுமில்ல நுழைவாயிலில் ஏற்படுத்தப்பட்டிருந்தது.

 இந்நிலையில் குறித்த வளைவினை அகற்றுமாறு முழங்காவில் காவல்துறை பொறுப்பதிகாரி அழுத்தங்களை பிரயோகித்தநிலையில், இலங்கை முப்படைகளதும் காவல்துறையினரதும் சட்டவிரோத கட்டடங்கள் பலவும் குவிந்துள்ள நிலையில் சாதாரண வளைவு எத்தகைய நெருக்கடியை தருகின்றதென சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!