எந்தவொரு விவாதத்திற்கும் தயார் : சஜித்!
#SriLanka
#Sajith Premadasa
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

எந்தவொரு விவாதத்திற்கும் தயார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவில் இன்று (03.04) 10 இலட்சம் ரூபா பெறுமதியான சிநேகபூர்வ வகுப்பறையை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், நாட்டின் பிரச்சினைகள் குறித்து விவாதம் தேவை என சமூகத்தில் பேசப்பட்டு வருவதாகவும் அவ்வாறானதொரு விவாதம் நடைபெற வேண்டும் என்பதை தான் ஏற்றுக் கொள்வதாகவும் தெரிவித்தார்.
விவாதங்களை நடத்துவது ஜனநாயக சமூகத்தின் உயர் பண்பாகும் எனக் கூறிய அவர், விவாதம் செய்வதுடன் அதன் ஊடாக நாட்டுக்கும் மக்களுக்கும் பெறுமதி சேர்க்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.



