தமிழக மக்கள் இலங்கைக்க உதவ தயாராக உள்ளனர்! தமிழக ஆயர்

#SriLanka #Sri Lanka President
Mayoorikka
1 year ago
தமிழக மக்கள் இலங்கைக்க உதவ தயாராக உள்ளனர்! தமிழக ஆயர்

தமிழக மக்கள் இலங்கைக்க உதவ தயாராக உள்ளனர் என கோயம்பத்தூர் திருமண்டல பேராயர் அதி வணக்கத்துக்குரிய ரவீந்தர் தெரிவித்துள்ளார்.

 வவுனியா - கனகராயன்குளம் பகுதியில் இன்று தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்தின் நிதியில் புதிதாக நிர்மானிக்கப்பட்டு பிரதிஸ்டை செய்யும் நிகழ்வில் கலந்து கொண்டு வாழ்த்து செய்தி தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கைக்கும், இந்தியாவிற்கும் இடையில் மிக நெருக்கமான உறவு ஏற்பட்டுள்ளது. அதன் வெளிப்பாடே இவ்வாறு நாம் நிதி உதவிகளை மேற்கொள்கிறோம்.

 இங்குள்ள மக்களிற்கும், இந்தியாவில் உள்ள மக்களிற்கும் இடையில் மருத்துவம், கலாச்சாரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் நெருக்கமான தொடர்புகள் உள்ளது. இது போன்ற மேலும் பல்வேறு உதவிகளை செய்வதற்கு மக்கள் தயாராக உள்ளனர். 

 நேற்றைய செய்தியின் அடிப்படையில் இந்தியாவிலிருந்து சுற்றுலாவிற்காக பல ஆயிரக்கணக்கானோர் இலங்கைக்கு வந்துள்ளதாக அறிந்தேன். இது, பொருளாதாரத்தில் மாத்திரமல்ல இரு நாட்டுக்குமான உறவை பலப்படுத்துவதாகவே அமைகின்றது. மேலும் உறவு கட்டியெழுப்பப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!