தாயகம் வந்தடைந்தனர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையானோர்! விமான நிலையத்தில் தொடர்ந்து விசாரணை (update)

#SriLanka #Tamil Nadu
Mayoorikka
1 year ago
தாயகம் வந்தடைந்தனர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையானோர்! விமான நிலையத்தில் தொடர்ந்து விசாரணை  (update)

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு 33 ஆண்டுகள் வரை சிறையிலிருந்து கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் விடுவிக்கப்பட்டு, திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முருகன், ரொபேர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் இன்று காலை இலங்கையை வந்தடைந்துள்ளனர். திருச்சி சிறப்பு முகாமிலிருந்து நேற்று இரவு 11.15 மணிக்கு சென்னைக்கு காவல்துறை வாகனம் மூலம் அழைத்து வரப்பட்டனர்.

 இதன்படி, இன்று(03) முற்பகல் 10 மணியளவில் சென்னை விமான நிலையத்திலிருந்து அவர்கள் இலங்கை நோக்கி பயணித்தனர்.

 மூவரும் காலை 11.30 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். அவர்களுக்கு இலங்கைக்கு செல்வதற்கு மாத்திரமே இந்தியாவிலுள்ள இலங்கை துணை உயர்ஸ்தானிகரகம் கடவுச்சீட்டு வழங்கியுள்ளதாகவும் சட்டத்தரணி புகழேந்தி பாண்டியன் தெரிவித்தார்.

(இரண்டாம் இணைப்பு )

அந்த மூவரிடமும் இலங்கை குற்றப்புலனாய்வு பிரிவினரால் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

images/content-image/2024/04/1712137711.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!