சுகாதார தொழிற்சங்கங்களின் போராட்டம் கைவிடப்பட்டது!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

சுகாதாரத்துறை ஊழியர்கள் முன்னெடுத்து வந்த தொழிற்சங்க போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.
அமைச்சு அதிகாரிகளுடன் முதலில் திங்கட்கிழமை நடைபெறவிருந்த கலந்துரையாடல் இன்று மாலைக்கு ஒத்திவைக்கப்பட்டதையடுத்து, சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்புடன் இணைந்த தொழிற்சங்கங்கள் இன்று (03.04) காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடத் திட்டமிட்டிருந்தன.
எவ்வாறாயினும், இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் கூடியிருந்த கூட்டம் சாதகமாக முடிவடைந்ததையடுத்து, திட்டமிட்டிருந்த காலவரையற்ற பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை கைவிடுவதற்கு சுகாதாரத்துறை தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.



