பல்கலைக்கழக மாணவர் ஒருவர் ரயிலில் மோதி உயிரிழப்பு!
#SriLanka
#Train
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
பேராதனை பல்கலைக்கழக முதுகலைப் பீடத்தின் இறுதியாண்டு மாணவர் ஒருவர் நேற்று (02.04) ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார்.
பேராதனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட களுபாலமவிற்கு அருகில் புகையிரத பாதையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
கண்டியில் இருந்து நாவலப்பிட்டி நோக்கி பயணித்த புகையிரதத்தில்தல்பிட்டிய வடக்கு, வாத்துவ பிரதேசத்தில் வசிக்கும் 24 வயதுடைய பல்கலைக்கழக மாணவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பேராதனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.