விற்பனைக்கு தயார் நிலையில் இருந்த இரத்தினக் கற்களுடன் இராணுவ அதிகாரி ஒருவர் கைது!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

விற்பனைக்கு தயார்படுத்தப்பட்டிருந்த 4 இரத்தினக்கற்களுடன் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி ஒருவர் பேருவளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தர்கா நகரில் வசிக்கும் 50 வயதுடைய ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த 4 நகைகளையும் இரண்டு கோடி ரூபாவிற்கு விற்பனை செய்ய சந்தேகநபர் திட்டமிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகத்திற்குரிய ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.



