வங்கியியல் திருத்தச் சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு இன்று!

பாராளுமன்றம் இன்று காலை 09.30 மணிக்கு கூடவுள்ளது.
வங்கியியல் திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு விவாதம் இன்று (02.04) இடம்பெறவுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சம்பந்தப்பட்ட சட்டமூலத்தில் வங்கி முறைமையைப் பாதுகாக்கும் பல முக்கிய சட்டங்கள் அடங்கியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.
இதேவேளை, கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டத்தின் கீழான உத்தரவுகள், பெறுமதி சேர் வரி சட்டத்தின் கீழான ஒழுங்குமுறைகள் மற்றும் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழான விதிமுறைகள் மீதான விவாதமும் இன்று இடம்பெறவுள்ளது.
இதேவேளை, அரசாங்க நிதி தொடர்பான குழுவும், அரசாங்க கணக்குகள் தொடர்பான குழுவும் இன்று கூடவுள்ளதுடன், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் அரசாங்க கணக்கு குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.



