பெரமுனவின் வேட்பாளராக ரணில்? விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

#SriLanka
Mayoorikka
1 year ago
பெரமுனவின் வேட்பாளராக ரணில்? விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்ரமசிங்க முன்னிறுத்தப்பட்டால் அவருக்கு ஆதரவளிப்பதில் இருந்து நாங்கள் விலகுவோம் என இளைஞர் அமைப்புகளின் தலைவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவு வழங்குவதற்கு கட்சியின் இளைஞர் முன்னணி உட்பட இளைஞர் அமைப்புக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

 கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்துவதற்கு அந்த அமைப்புகள் விருப்பம் தெரிவித்துள்ளன. ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுமாறு கட்சியின் இளைஞர் அமைப்புகளால் கோரிக்கைகள் ஏற்கனவே நாமல் ராஜபக்சவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

 இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சவும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு தயாராகுமாறு நாமல் ராஜபக்சவிடம் அறிவித்துள்ளதாக தெரியவருகிறது. இதன் முதற்கட்டமாகவே கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியை நாமல் ராஜபக்சவிடம் வழங்க பசில் ராஜபக்ச ஏற்பாடு செய்ததாகவும் தெரியவருகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!