சுகாதார தொழிற்சங்கங்களின் போராட்டம் தொடரும் என அறிவிப்பு!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news #Workers
Thamilini
1 year ago
சுகாதார தொழிற்சங்கங்களின் போராட்டம் தொடரும் என அறிவிப்பு!

நாடளாவிய ரீதியில் 10 வைத்தியசாலைகளில் நாளை அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.  

சுகாதார தொழிற்சங்கங்கள் கூட்டணியின் அழைப்பாளர் ரவி குமுதேஷ் இன்று (01.04) மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போது மேற்படி தெரிவித்துள்ளார். 

இதன்போது மேலும் தெரிவித்த அவர்,  காலை 6.30 மணிக்கு ஆரம்பிக்கும் பணிப்புறக்கணிப்பு 4 மணித்தியாலங்களுக்கு தொடரும் என அறிவித்துள்ளார். 

 அதன்படி நாளை வேலைநிறுத்தம் அமுல்படுத்தப்படும் வைத்தியசாலைகள் வருமாறு, 

 இலங்கை தேசிய வைத்தியசாலை

கராபிட்டிய போதனா வைத்தியசாலை

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை

பேராதனை போதனா வைத்தியசாலை

திருகோணமலை போதனா வைத்தியசாலை

கேகாலை பொது வைத்தியசாலை

 பொலன்னறுவை பொது வைத்தியசாலை

மன்னார் ஆதார வைத்தியசாலை

கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலை ஆகியவற்றில் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!