வரியை அகற்றினால் குறைக்கலாம்: அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்க தலைவர்
#SriLanka
#taxes
Mayoorikka
1 year ago

முட்டை ஒன்றின் விலை 35 ரூபாக குறைப்பதன் மூலமும் , பட்டருக்கு விதிக்கப்பட்டுள்ள வரியை அகற்றுவதன் மூலமும் ஒரு கிலோ கேக் 400 ரூபாவுக்கு விற்பனை செய்ய முடியும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, தரமான கேக் கிலோ ஒன்றின் விலை சுமார் 1000 ரூபா எனவும், 35 ரூபாவிற்கு முட்டை வழங்கினால் ஒரு கிலோ கேக்கின் விலை 100 ரூபாவினால் குறைக்கப்படும்.
ஒரு கிலோ வெண்ணெயின் மீது விதிக்கப்பட்டுள்ள 900 ரூபா வரியை நீக்கினால் ஒரு கிலோ கேக்கை 400 ரூபாவிற்கு வழங்க முடியும் எனவும் தெரிவிக்கின்றனர்.



