வயோதிப வெளிநாட்டவருடன் இலங்கை வந்த மனைவி: கணவன் செய்த காரியம்

#SriLanka #Kuwait
Mayoorikka
1 year ago
வயோதிப வெளிநாட்டவருடன் இலங்கை வந்த மனைவி: கணவன் செய்த காரியம்

குவைத்தில் இருந்து தான் வேலை செய்த வீட்டின் உரிமையாளரை மனைவி நாட்டிற்கு அழைத்து வந்தமையினால் ஏற்பட்ட தகராறு காரணமாக கணவன் இன்று அதிகாலை வீட்டிற்கு தீ வைத்த சம்பவம் மொனராகலையில் இடம்பெற்றுள்ளது.

 சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குவைத் நாட்டை சேர்ந்த 80 வயது முதியவரை மனைவி அழைத்து வந்த நிலையில், தங்கும் இடம் தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது.

 இதன்போது கணவன் வீட்டிற்கு தீ வைத்துவிட்டு பிரதேசத்தை விட்டு தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சந்தேகநபர் மொனராகலை மாவட்ட உள்ளூராட்சி சபையின் சாரதி எனவும், அவரை கைது செய்வதற்கான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

 இந்த தீ விபத்தில் காயமடைந்த குவைத் நாட்டவர் மற்றும் சந்தேகநபரின் மனைவி ஆகியோர் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில், அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பிபில பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 பிபில பொலிஸ் அதிகாரிகள் மற்றும் உள்ளூர்வாசிகள் அடங்கிய குழு தீயை அணைத்துள்ளதுடன், வீடு மற்றும் உடமைகள் பலத்த சேதமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!