எரிபொருள் விலைகள் குறைப்பு! முழு விபரம் இதோ!!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news #petrol
Dhushanthini K
1 year ago
எரிபொருள் விலைகள் குறைப்பு! முழு விபரம் இதோ!!

இலங்கை பெற்றோலியம் சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் நேற்று (31.03) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் விலைகளில் திருத்தம் செய்துள்ளது. 

இதன்படி 95 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை 07 ரூபாவினால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 440 ரூபாயாகும். 

அத்துடன், லங்கா சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 72 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 386 ரூபாவாகும். 

மண்ணெண்ணெய் விலை லிட்டருக்கு 12 ரூபாவினால் குறைந்துள்ளதுடன் அதன் புதிய விலை 245 ரூபாவாகும். 

எவ்வாறாயினும், 92 ஒக்டேன் பெற்றோல் மற்றும் ஆட்டோ டீசல் விலையில் மாற்றம்  ஏதும் செய்யப்படவில்லை.

இதேவேளை  லங்கா ஐஓசி நிறுவனமும் எரிபொருள் விலையில் மாற்றம் செய்துள்ளது. மேலும், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் விலைக்கு ஏற்ப சினோபெக் எரிபொருளின் விலைகளும் திருத்தப்பட்டுள்ளன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!