அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக் கல்வி சபையில் இடம்பிடித்த இலங்கையர்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
அமெரிக்காவின்  தேசிய பாதுகாப்புக் கல்வி சபையில் இடம்பிடித்த இலங்கையர்!

அமெரிக்காவின்  தேசிய பாதுகாப்புக் கல்வி சபையின் ஆலோசகராக இலங்கை வம்சாவளியான கலாநிதி பெட்ரிக் மெண்டிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.  

வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

கலாநிதி பெட்ரிக் மெண்டிஸின் விரிவான அரசாங்க சேவை மற்றும் கல்விசார் சாதனைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.  

14 உறுப்பினர்களைக் கொண்ட தேசிய பாதுகாப்புக் கல்வி சபையானது எட்டு அமைச்சரவை செயலாளர்கள் மற்றும் ஆறு புகழ்பெற்ற அமெரிக்க குடிமக்களைக் கொண்டுள்ளது. இந்த சபைக்கு அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் தலைமை தாங்குகின்றார்.

இலங்கையில் உள்நாட்டு போர் இடம்பெற்ற காலப்பகுதியில் கலாநிதி பெட்ரிக் மெண்டிஸ் அமெரிக்காவின் மினசோட்டா மாநிலத்திற்கு குடிப்பெயர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!