யாழில் மெய்வல்லுனர் போட்டி இல்ல அலங்கரிப்பு தொடர்பில் அழைப்பு!

#SriLanka #Jaffna #School #Police
Mayoorikka
1 year ago
யாழில் மெய்வல்லுனர் போட்டி  இல்ல அலங்கரிப்பு தொடர்பில்  அழைப்பு!

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் இடம்பெற்ற இல்ல மெய்வல்லுனர் போட்டியின் இல்ல அலங்கரிப்பு தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 யூனியன் கல்லூரி இல்ல மெய்வல்லுனர் போட்டி நேற்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்றது. அதன் போது, கார்த்திகைப் பூ வடிவிலும், போர் டாங்கி வடிவிலும், இல்ல அலங்கரிப்புக்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

 அவை தொடர்பிலான புகைப்படங்கள் நேற்றைய தினம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருந்தன. அது தொடர்பில் நேற்றைய தினம் விளையாட்டு போட்டி நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையே காவல்துறையினர் , இராணுவ புலனாய்வாளர்கள் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினர் பாடசாலைக்கு நேரில் சென்று இல்லங்களை பார்வையிட்டு, புகைப்படங்கள், காணொளிகள் என்பவற்றை எடுத்தனர். அத்துடன் இன்றைய தினம் காவல் நிலையத்திற்கு வருகை தருமாறு பாடசாலை நிர்வாகத்திற்கு அறிவுறுத்தி இருந்தனர்.

 இந்நிலையில் அதிபர் உள்ளிட்டவர்கள் காவல் நிலையம் சென்று இருந்த நிலையில், காவல்துறையினர் அவர்களிடம் வாக்கு மூலங்களை பெற்ற பின்னர் அவர்களை விடுவித்து இருந்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!