கொழும்பு நோக்கி பயணித்த ரயில் மோதி இருவர் உயிரிழப்பு!
#Accident
#Train
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
கண்டியில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி சென்ற விரைவு ரயில் மோதியதில் இரு இடங்களில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த விபத்து இன்று (30.03) ராகம புகையிரத கடவை மற்றும் ராகம துடுவேகெதர பிரதேசத்தில் இடம்பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதில் ராகம பகுதியில் வசிக்கும் 24 வயதுடைய இளைஞர் ஒருவரும், தற்கொலை செய்யும் நோக்கில் ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்ட 50 வயதுடைய நபரும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.