தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிவிப்பு : குழப்பத்தில் மக்கள்!

சர்வதேச நாணய நிதியத்தின் பொருளாதார சீர்திருத்த வேலைத்திட்டம் முடிவடையும் வரை தேர்தலை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவை மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டை பொருளாதார ரீதியாக முன்னோக்கி கொண்டு செல்வதற்கு சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமைச்சரவை மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகளை தனித்தனியாக சந்தித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
நிதி தொடர்பான வேலைத்திட்டம் ஜூலை இறுதி வரை அமுலில் இருக்கும் என்பதால் அதற்கு முன்னர் தேர்தல் நடத்தப்பட மாட்டாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.
எவ்வாறாயினும், ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான நேரம் அரசியலமைப்பு ரீதியாக நிதி நிதியத்தின் செயல்முறையின் பின்னரே அறிவிக்கப்படும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே முதலில் ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகுமாறு அமைச்சரவைக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் விக்கிரமசிங்க அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



