முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் வைத்தியர் அகிலேந்திரனுக்கு அஞ்சலி!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் வைத்தியர் அகிலேந்திரனுக்கு அஞ்சலி நிகழ்வு இன்றையதினம் மாஞ்சோலை வைத்திய சாலையில் இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையின் சிறீலங்கா ஜனரஜ சுகாதார சேவைப் சங்கத்தின் தலைவர் கஜேந்திரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் உதவி பணிப்பாளர் வைத்தியர் தஞ்சயன் மற்றும் வைத்தியர்கள், அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், அரசாங்க தாதியர் உத்தியோகத்தர் சங்கம், பணியாளர்கள், ஊழியர்கள், என பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.
முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் வைத்தியர் கு.அகிலேந்திரன் கடந்த 28.03.2024 அன்று ஓமந்தையில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது



