கல்முனையில் ஐந்தாவது நாளாகவும் தொடர்ந்த போராட்டம் : பலர் பங்கேற்பு!
#SriLanka
#Batticaloa
#Kalmunai
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினுடைய உரிமைக்கான மக்கள் போராட்டம் 5வது நாளாக மெழுகுதிரி ஏற்றி உரிமை கோஷம் எழுப்பிய போராட்டமாக அமைந்திருந்தது.
அதாவது நேற்று (29.03 ) மாலை குறித்த போராட்டத்தில் அதிகளவான மக்கள் கலந்து கொண்டிருந்ததுடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் மற்றும் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் ஆகியோரும் கலந்து கொண்டனர் .
இப் போராட்டம் வழமைக்கு மாறாக தீச்சுடர் ஏந்திய ஓர் போராட்டமாக மக்கள் எழுச்சியுடன் இடம்பெற்றமை சுட்டிக்காட்டத்தக்கது.



