பண்டிகை காலத்தில் கோழி இறைச்சி, முட்டையை தட்டுப்பாடின்றி வழங்க நடவடிக்கை!
#SriLanka
#Egg
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை தட்டுப்பாடு இன்றி வழங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளது.
உறைந்த கோழி இறைச்சியை 1000 ரூபாவிற்கு விற்பனை செய்ய முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், இந்தியாவில் இருந்து முட்டை இறக்குமதியை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, மாநில வணிக இதர சட்டப்பூர்வ நிறுவனம் தெரிவித்துள்ளது.
பண்டிகைக் காலத்தில் சுமார் நான்கு மில்லியன் இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் சந்தைக்கு வெளியிடப்படும் என அதன் தலைவர் ஆசிறி வலிசுந்தர குறிப்பிட்டார்.



